என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பீகார் மக்கள் NDA கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்து வரலாற்றை உருவாக்கி உள்ளனர் - அண்ணாமலை
    X

    பீகார் மக்கள் NDA கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்து வரலாற்றை உருவாக்கி உள்ளனர் - அண்ணாமலை

    • பிரதமரின் தலைமை, நிதிஷ்குமாரின் ஆட்சி மீது பீகார் மக்கள் மகத்தான நம்பிக்கை வைத்துள்ளதை தேர்தல் வெற்றி உறுதி செய்துள்ளது.
    • தேர்தல் முடிவு சந்தர்ப்பவாத அரசியலை விட நல்லாட்சி, முன்னேற்றம், தேசிய நலன் மேலோங்கி உள்ளதை காட்டுகிறது.

    தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவரும் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை பீகார் மக்கள் அளித்து வரலாற்றை உருவாக்கி உள்ளனர்.

    பிரதமரின் தலைமை, நிதிஷ்குமாரின் ஆட்சி மீது பீகார் மக்கள் மகத்தான நம்பிக்கை வைத்துள்ளதை தேர்தல் வெற்றி உறுதி செய்துள்ளது.

    இந்த வெற்றி, பீகாரின் ஒவ்வொரு சகோதர சகோதரியும் வளர்ச்சி சார்ந்த எதிர்காலத்தில் வைத்திருக்கும் நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதிகாரமளித்தல், செழிப்பு மற்றும் ஒற்றுமைக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அர்ப்பணிப்பு சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் எதிரொலித்துள்ளது. தவறாக வழிநடத்தவும் பிளவுபடுத்தவும் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்துள்ளது.

    தேர்தல் முடிவு சந்தர்ப்பவாத அரசியலை விட நல்லாட்சி, முன்னேற்றம், தேசிய நலன் மேலோங்கி உள்ளதை காட்டுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×