என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அஜித் குமார் லாக்-அப் மரணம்: உயர்நீதிமன்றம் மதுரை கிளை சரமாரி கேள்வி..!
    X

    அஜித் குமார் லாக்-அப் மரணம்: உயர்நீதிமன்றம் மதுரை கிளை சரமாரி கேள்வி..!

    • காவலாளி அஜித் குமார் போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார்.
    • கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    திருப்புவனம் இளைஞர் காவலாளி அஜித் குமார் போலீசார் தாக்கியதில் லாக்-அப் மரணம் ஆனார். இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த விசாரணையின் போது, அஜித் குமாரை தாக்கி நிகழ்வின் இயக்குநர் யார்?. எப்.ஐ.ஆர். பதிவு செய்யாமல் சிறப்புப்படை எப்படி வழக்கை கையில் எடுத்தது? அஜித் குமார் உடலில் எந்த பாகங்களும் விடுபடாமல் அத்தனை இடங்களிலும் காயம் உள்ளது?. தாக்குதல் நடத்தப்பட்ட கோவிலின் சிசிடிவி காட்சிகள் எங்கே? உள்ளிட்ட கேள்விகளை நீதிபதி எழுப்பியுள்ளது.

    மேலும், போலீசார் கூட்டாக சேர்ந்து இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். வருங்காலங்களில் எந்த இடத்திலும் காவல்துறையினர் இதுபோல நடந்து கொள்ளக்கூடாது. கல்வியறிவு அதிகமுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலத்தில், இதுபோன்ற நிகழ்வு ஆபத்தானது. அஜித்குமார் உடலின் பிரேதப் பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது.

    பிறப்புறுப்பு, வாய், காதுகளில் மிளகாய்ப் பொடி உள்ளது. அஜித்குமார் இறக்கும் வரை, அவர் எதற்காக விசாரிக்கப்பட்டார் என்பதற்கு FIR பதிவு செய்யப்படவில்லை. அஜித் குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசின் நடவடிக்கை பொதுமானதாக இல்லை. உயர் அதிகாரிகளை பாதுகாக்கும் வகையில் அரசின் நடவடிக்கை உள்ளது. மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது. இதற்கு காரணமாக உயர் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தது.

    Next Story
    ×