என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
அ.தி.மு.க. பொதுக்குழுவை சிறப்பாக நடத்த 7 குழுக்கள் அமைப்பு
- எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணைய தீர்ப்புகள் அமைந்தன.
- இளைஞர்கள் கூடுதல் எண்ணிக்கையில் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழு வருகிற 15-ந் தேதி நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கட்சியின் விதிப்படி பொதுக்குழுவை கூட்ட 5 நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியிட வேண்டும். அதை 18 நாட்களுக்கு முன்பே அறிவித்து விட்டார்.
ஏற்கனவே ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் பொதுக் குழுக்கள் எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோரின் பலத்தைக் காட்டும் போட்டிக் கூட்டங்களாகவே இருந்தன.
மேலும் இரட்டைத் தலைமையாக இருந்ததை மாற்றி ஒற்றைத் தலைமையாக அறிவித்த பொதுக் குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் வரை சென்றார் ஓ.பி.எஸ்..
ஆனாலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணைய தீர்ப்புகள் அமைந்தன.
எனவே இந்த பொதுக் குழுவை விரிவான பொதுக் குழுவாக கூட்டுகிறார்.
அதன்படி இந்த பொதுக் குழுவுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக 2 ஆயிரம் பேர் அழைக்கப்படுகிறார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் 3 ஆயிரம் பேரையும் சேர்த்து சுமார் 5 ஆயிரம் பேர் கூட்டத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
எனவே முழு அளவில் நடைபெறும் இந்த பொதுக் குழு கூட்டத்தை சிறப்பாக நடத்த தீர்மானங்கள் தயாரிப்புக்குழு, வரவேற்புக்குழு, உணவு உபசரிப்புக் குழு உள்ளிட்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அ.தி.மு.க.வில் கடந்த ஒரு மாதமாக கள ஆய்வுக் கூட்டங்கள் மாவட்ட வாரியாக நடைபெற்று வருகின்றன. இந்த கள ஆய்வுக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், மாவட்ட மறு சீரமைப்பு தொடர்பாக நிர்வாகிகளின் கருத்துகள் ஆகியவை தொகுக்கப்பட்டு அடுத்த வாரம் எடப்பாடி பழனிசாமியிடம் கள ஆய்வுக் குழுவினரால் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் அ.தி.மு.க.வில் மாவட்ட மறுசீரமைப்பு செய்யப்பட்டு மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இளைஞர்கள் கூடுதல் எண்ணிக்கையில் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்படுவார்கள். கூட்டணி பற்றி பேசுவதற்கான அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்