என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து அ.தி.மு.க. 25-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ். அறிவிப்பு
- திருப்பூர் மாநகராட்சி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.
- சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை முறையாக மேற்கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாநகராட்சி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை முறையாக மேற்கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில், திருப்பூர் குமரன் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.
Next Story






