search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிப்பில் ஈடுபட்ட பெண் கைது- ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகை மீட்பு
    X

    கைது செய்யப்பட்ட அய்யம்மாள்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிப்பில் ஈடுபட்ட பெண் கைது- ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகை மீட்பு

    • அதிர்ச்சியடைந்த அவர் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார்.
    • கூட்ட நெரிசலை பயன்படுத்து புர்கா அணிந்து பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி திரிகூடபுரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சண்முகத்தாய் (வயது58). இவர் கடந்த 3-ந்தேதி அச்சன்புதூரில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்திற்கு சென்றார்.

    அப்போது இவரது கழுத்தில் கிடந்த 48 கிராம் எடை கொண்ட தங்கச் செயினை மர்மநபர்கள் பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    இதுபோன்று கடந்த மாதம் 28-ந்தேதி கடைய நல்லூர் முத்துகிருஷ்ணா புரம் பெரிய தெருவை சேர்ந்த சேர்த்தியன் மனைவி ஜோதி பாலா தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கடையநல்லூர் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்ததில் நின்றபோது அவரது மகள் கழுத்தில் கிடந்த 24 கிராம் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து கடையநல்லூர் பகுதிகளில் கோவில் திருவிழாக்கள், பஸ் நிலைய கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து புகார் வந்தன.

    இதையடுத்து இது குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவிட்டார். இந்நிலையில் புளியங்குடி டி.எஸ்.பி. அசோக் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் பஸ் நிறுத்தத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்த போது 2 பெண்கள் சிறுமி கழுத்தில் கிடந்த தங்கச் செயினை பறித்து செல்லும் காட்சி இருந்தது. விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ராஜ கோபால்நகர் மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்த திருப்பதி மனைவி அய்யம்மாள் (35) என்பது தெரியவந்தது.

    மேலும் அய்யம்மாள் திருவிழாக்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்து புர்கா அணிந்து பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டது.

    Next Story
    ×