search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரிசிகொம்பன் வசிப்பிடம் இனி எங்கே?
    X

    அரிசிகொம்பன் வசிப்பிடம் இனி எங்கே?

    • முத்துக்குளி வயல் என்னும் வன பகுதியில் தான் அரிக்கொம்பனை விட்டுள்ளார்கள்.
    • அங்கிருந்து நாலுமுக்கு, ஊத்து, மாஞ்சோலைன்னு ஒரு ரவுண்ட் அடிக்கவும் வாய்ப்பிருக்கு.

    தமிழக-கேரள மக்களை அச்சுறுத்திய அரிசி கொம்பனை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தது சந்தோஷம் தான் என மகிழ்ச்சி அடைந்த நிலையில், தற்போது அதனை வனத்தில் விட்ட பகுதி மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டங்களுக்கு விரைவில் செல்லும் வகையில் உள்ள முத்துக்குளி வயல் என்னும் வன பகுதியில் தான் அரிக்கொம்பனை விட்டுள்ளார்கள்.

    நெல்லை மாவட்டம் அப்பர் கோதையாரில் இருந்து 13 கி.மீ.தூரத்தில் தான் முத்துகுளி வயல் உள்ளது. இதனால் சில மணி நேரத்திலேயே அப்பர் கோதையார் மின்வாரிய குடியிருப்புக்கு, அரிசிக்கொம்பன் நினைத்தால் வந்து விட முடியும். அங்கிருந்து நாலுமுக்கு, ஊத்து, மா ஞ்சோலைன்னு ஒரு ரவுண்ட் அடிக்கவும் வாய்ப்பிருக்கு.

    முத்துகுளியில் இருந்து அப்படியே அந்த பக்கமா கொஞ்சதூரம் நடந்தால் குமரி மாவட்டம் பாலமோர் எஸ்டேட் குடியிருப்பிற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. அங்கிருந்து மாறாமலை, காளிகேசம், கீரிப்பாறை வரைக்கும் வந்தாலும் வரலாம் அரிசிக்கொம்பன். குறுக்கு வெட்டு சரிவுகளை கடந்து சென்றால் ஒரு மணி நேரத்தில் அரிசிக்கொம்பனால் லோயர் கோதையாரை அடைந்துவிட முடியும். கோதையாரை சுற்றி குற்றியாறு, கிழவியாறு, மோதிரமலை என்று 10-க்கும் மேற்பட்ட வன கிராமங்கள் உள்ளன.

    சரி, தமிழ்நாடு பக்கமே இனி தலைவைத்து படுக்க மாட்டேன்னு அரிசிக்கொம்பன் நினைத்தால் வனத்தின் தெற்கு பக்கமா கொஞ்சம் காலார நடந்தால் போதும்.... கேரளாவின் நெய்யாறு வனப்பகுதி வந்துவிடும். அப்படியே விதுரா, நெடுமங்காடு, காட்டா கடைன்னு ஊருக்குள்ள புகுந்து போகவும் வாய்ப்பிருக்கு.

    எங்கே செல்ல வேண்டும் என்று ஒருவனால் மட்டுமே முடிவெடுக்க முடியும். அவன்.... அரிசி கொம்பன் மட்டுமே...!

    Next Story
    ×