என் மலர்

  தமிழ்நாடு

  வில்வ இலைக்கு இவ்வளவு மகத்துவமா?- ஆச்சரியமளிக்கும் ஆன்மீக அம்சங்கள்...
  X

  வில்வ இலைக்கு இவ்வளவு மகத்துவமா?- ஆச்சரியமளிக்கும் ஆன்மீக அம்சங்கள்...

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வில்வ இலையை அர்ப்பணித்த பின் அதனை உங்கள் நெஞ்சோரம் உள்ள சட்டைப்பையில் வைத்துக்கொண்டு உலாவுங்கள்.
  • மகாராத்திரி அன்று ஆதியோகியில் ருத்ராட்ச பிரதிஷ்டை செய்யும்போது சத்குரு வில்வ இலையை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

  சிவனுக்கு உகந்தவைகளில் முக்கியமானது வில்வ இலை. மிகவும் புகழ்பெற்ற பில்வாஷ்டகத்தில் வில்வ இலைகளின் நற்பண்புகள் குறித்து போற்றப்பட்டுள்ளது. மேலும் சிவனுக்கு வில்வ இலை மீது உள்ள அன்பை குறித்த குறிப்புகளும் அதில் உள்ளது. பொதுவாகவே வில்வ இலை இல்லாமல் சிவனுக்கான அர்ப்பணிப்பு முழுமை அடையாது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த மரமும் அதன் இலைகளும் புனிதமாக கருதப்பட்டு வருகிறது.

  மூன்று இலைகள் ஒன்று சேர்ந்தார் போல் இருக்கும் அதன் வடிவம் பல விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலை, சாத்வீகம், ரஜோ குணம் மற்றும் தாமசம் எனும் மூன்று குணங்களை, அல்லது பிரணவ மந்திரத்தின் ஒலிகளான "அ" "உ" "ம்" போன்ற பல அம்சங்களின் குறியீடாக உள்ளது. மேலும் அந்த மூன்று இலை வடிவமானது சிவபெருமானின் மூன்று கண்களை அல்லது திரிசூலத்தை குறிப்பதாகவும் இருக்கிறது.

  இது போன்ற பல புராண குறிப்புகள், விளக்கங்கள் இருக்கின்றன. இருந்தாலும், ஏன் வில்வம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது என சத்குரு அவர்கள் விளக்கும்போது,

  "நீங்கள் சிவனுக்கு வில்வத்தை அர்ப்பணிக்கும்போது, அதை அவரோடு விட்டுவிடப் போவதில்லை. சிவனுக்கு அர்ப்பணித்த பின் அந்த இலையை நீங்கள் எடுத்துக்கொள்ள போகிறீர்கள். காரணம், இந்த குறிப்பிட்ட இலைக்கு ஆற்றலை உள்வாங்கும் உயர்ந்த திறன் இருக்கிறது. இந்த இலையை லிங்கத்தின் மீது வைத்து எடுத்த பிறகு, அந்த இலையால் லிங்கத்தின் அதிர்வுகளை பல மணி நேரம் தன்னகத்தே வைத்திருக்க முடியும். இதை நீங்கள் முயற்சித்து பாருங்கள். வில்வ இலையை அர்ப்பணித்த பின் அதனை உங்கள் நெஞ்சோரம் உள்ள சட்டைப்பையில் வைத்துக்கொண்டு உலாவுங்கள். அது உங்கள் ஆரோக்கியம், நல்வாழ்வு, மனநிலை என எல்லாவற்றிலும் உங்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும்" என்கிறார். மேலும் "ஆன்மீக பாதையில் பயணிக்கும் மக்களுக்கு, அவர்கள் பயன்படுத்தக்கூடிய பல அம்சங்கள் இது போல் புனித கருவியாக இருக்கிறது. இது கடவுள் பற்றியது அல்ல இது உங்களை பற்றியது ஒன்றை அடைவதற்கான உங்கள் திறன் பற்றியது" என்கிறார்.

  மேலும் மகாராத்திரி அன்று ஆதியோகியில் ருத்ராட்ச பிரதிஷ்டை செய்யும்போது சத்குரு வில்வ இலையை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது . வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தரும் ஆதியோகியின் திருவுருவ தரிசனம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக, ஆதியோகி ரத யாத்திரை நிகழ்ந்து வருகிறது. அதன்படி 5 ஆதியோகி ரதங்கள் தமிழகம் எங்கும் வலம் வருகின்றன. ஒரு நாளில் 500 கி.மீ. வரை ஒவ்வொரு ரதமும் பயணிக்கின்றது. இதன் மூலம், ஆதியோகியின் தரிசனம் தமிழக மக்கள் அனைவருக்கும் சாத்தியமாகி வருகிறது. இந்த ரதங்கள் வரும் மகா சிவராத்திரிக்கு முந்தைய தினமான பிப்ரவரி 17 அன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடையும்.

  Next Story
  ×