search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விழுப்புரம் கொலை சம்பவம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
    X

    விழுப்புரம் கொலை சம்பவம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

    • பிரச்சினையில் தலையிட்ட இப்ராஹிம் என்பவரை வல்லரசு மற்றும் ராஜசேகர் ஆகியோர் கத்தியால் குத்தி, காயம் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.
    • துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருக்கக்கூடிய சம்பவம் அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது:-

    விழுப்புரத்தில் பழக்கடை நடத்தி வரும் ஞானசேகர் என்பவருக்கு சாந்தி என்ற மனைவியும், ராஜசேகர், வல்லரசு என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், ஞானசேகருக்கு வேறோரு பெண்ணிடம் தொடர்பு இருப்பதாகவும், அதனால் பழக்கடையில் வரும் வருமானத்தைக் குடும்பத்திற்குத் தருவதில்லை என்றும், சாந்தி தனது மகன்களிடம் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து, 29-3-2023 அன்று மாலை, ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகியோர் தனது தந்தையிடம் இதுகுறித்துக் கேட்க பழக்கடைக்குச் சென்றபோது, அங்கு அவர் இல்லாததால், பிரச்சினை செய்திருக்கிறார்கள். அப்பிரச்சினையில் தலையிட்ட இப்ராஹிம் என்பவரை வல்லரசு மற்றும் ராஜசேகர் ஆகியோர் கத்தியால் குத்தி, காயம் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. காயம்பட்ட இப்ராஹிம் உயிரிழந்திருக்கிறார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட வல்லரசு மற்றும் ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    பேரவைத் தலைவரே, இது தனிப்பட்ட குடும்பப் பிரச்சினையின் காரணமாக ஏற்பட்ட தகராறின் போது, அங்கு தடுக்க வந்த நபர், துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி, உயிரிழந்திருக்கக்கூடிய சம்பவம் என்பதைத் தங்கள் வாயிலாக இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    Next Story
    ×