search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசனுக்கே இந்த அரியாசனம் என்ற வாசகத்துடன் விஜய் கட்சியினரின் பரபரப்பு போஸ்டர்கள்
    X

    "அரசனுக்கே இந்த அரியாசனம்" என்ற வாசகத்துடன் விஜய் கட்சியினரின் பரபரப்பு போஸ்டர்கள்

    • தலைவரின் தமிழக வெற்றி கழகம் வருக வருக மிஷன் 2026 என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது.
    • கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் பற்றி மக்களை நேரில் சந்தித்து தெரிவிக்குமாறு விஜய் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் தனது கட்சி பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.

    கட்சியின் பெயரை அறிவித்ததை தொடர்ந்து தற்போது கட்சி கொடியை தயார் செய்யும் பணியில் நடிகர் விஜய் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

    இதற்கிடையே விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து கட்சியாக மாற்றப் போவதாக அறிவித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    பல்வேறு இடங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மேலும் அட்டகாசமான சுவரொட்டிகளையும் ஒட்டி வருகின்றனர்.

    மாநகர பகுதிகளில் மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜகோபால் தலைமையில் திரளான இளைஞரணி நிர்வாகிகள் பொதுமக்களை ஈர்க்கும் வகையில் வசனங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.

    அந்த வகையில் பாளை தியாகராஜ நகர் பகுதியில் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூட வருகை தரும் தலைவர் தளபதியின் தமிழக வெற்றி கழகம் வருக வருக என போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

    இதேபோல் அரசனுக்கே இந்த அரியாசனம். தலைவரின் தமிழக வெற்றி கழகம் வருக வருக மிஷன் 2026 என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது. இதேபோல் பாளை தலைமை இளைஞர் அணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் மாற்றம் உன்னிடம் இருந்து தொடங்கட்டும். நாளைய முதல்-அமைச்சரே என்றும், நாளைய தமிழகமே என்றும் பல்வேறு வசனங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    இவ்வாறாக நெல்லை மாநகர இளைஞரணி சார்பில் பரவலாக அதிரடி வசனங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் பற்றி மக்களை நேரில் சந்தித்து தெரிவிக்குமாறு விஜய் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அதன்படி விஜய் ரசிகர்களும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், இளைஞர்கள், இளம்பெண்களை தங்கள் கட்சியில் இணைந்து பணியாற்றுவது குறித்து தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.

    Next Story
    ×