search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீராணம் ஏரி நீர்மட்டம் இன்னும் ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவை எட்டும்
    X

    வீராணம் ஏரி நீர்மட்டம் இன்னும் ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவை எட்டும்

    • வீராணம் ஏரி மூலம் 44 ஆயிரத்து 865 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
    • கீழணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு திறக்கப்பட்டது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருகிறது.

    வீராணம் ஏரி மூலம் 44 ஆயிரத்து 865 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து கீழணைக்கு ஜூன் மாதம் 18-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் படிப்படியாக கீழணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் ஏரியில் திறக்கப்பட்டு தற்போது 45.10அடி தண்ணீர் உள்ளது. வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வருகிற திங்கட்கிழமைக்குள் ஏரி முழு அளவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. தற்போது விவசாய பணிகள் நடைபெறாததால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

    Next Story
    ×