என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ரெட்டியார்பட்டியில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த வேன்- 20 பேர் படுகாயம்
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்தது.
- விபத்தை அறிந்ததும் கலெக்டர் கார்த்திகேயன் காரில் இருந்து கீழே இறங்கி வேனில் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்தினார்.
நெல்லை:
நாங்குநேரியை அடுத்து உள்ள பரப்பாடியில் இருந்து ஒரு வேனில் 20-க்கும் மேற்பட்டவர்கள், துக்க நிகழ்வு ஒன்றுக்காக பாளை வி.எம்.சத்திரம் அருகே உள்ள ஆரோக்கிய நாதபுரத்திற்கு வந்தனர்.
பாளை அருகே ரெட்டியார்பட்டி மலை பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வேனின் டயர் வெடித்தது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்தது. எனவே வேனில் இருந்த பெண்கள் உள்பட அனைவரும் கத்தி கூச்சலிட்டனர்.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே அந்த வழியாக கலெக்டரின் கார் சென்றது. விபத்தை அறிந்ததும் கலெக்டர் கார்த்திகேயன் காரில் இருந்து கீழே இறங்கி வேனில் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்தினார்.
உடனடியாக அவரது உத்தரவிற்கிணங்க 5 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. அதில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டீன் ரேவதியிடம் கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக்கொண்டார்.






