search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்துத்துவ சனாதன சக்திகளின் முயற்சிகளை முறியடிப்போம்- வைகோ அறிக்கை
    X

    இந்துத்துவ சனாதன சக்திகளின் முயற்சிகளை முறியடிப்போம்- வைகோ அறிக்கை

    • பழங்கால பஞ்சாயத்து முறைகள் குறித்து கருத்தரங்குகள் நடத்துவதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு யூ.ஜி.சி மூலம் அறிவிப்பை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.
    • அரசியல் சட்டத்தையே தகர்க்க முனைந்திடும் இந்துத்துவ சனாதனச் சக்திகளின் முயற்சிகளை முறியடிக்க அரசியல் சாசன நாளில் உறுதி ஏற்போம்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1948 நவம்பர் 4-ந்தேதி அரசியல் நிர்ணய சபையில் அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுத் தலைவர் டாக்டர் அம்பேத்காரால் முன்மொழியப்பட்டு, 1949 நவம்பர் 26-ந்தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    1950 ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. அந்நாளே குடியரசு நாளாக கொண்டாடப்படுகிறது.

    நவம்பர் 26-ந்தேதி அரசியல் சட்ட நாளை மறைத்து, அரசு சார்பில் கல்லூரிகளில் பாரதம், பகவத் கீதை, வேத இலக்கியம், உபநிடதங்கள், பழங்கால பஞ்சாயத்து முறைகள் குறித்து கருத்தரங்குகள் நடத்துவதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு யூ.ஜி.சி மூலம் அறிவிப்பை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

    இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளான இறையாண்மை, சோசலிசம், சமயச் சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு முறை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தனிமனித மாண்பு, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவை அனைத்தையும் தகர்த்து தவிடுபொடி ஆக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கடந்த எட்டு ஆண்டு கால செயல்பாடுகள் இருக்கின்றன.

    அரசியல் சட்டத்தையே தகர்க்க முனைந்திடும் இந்துத்துவ சனாதனச் சக்திகளின் முயற்சிகளை முறியடிக்க அரசியல் சாசன நாளில் உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×