search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்- சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்
    X

    குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்- சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்

    • தென்காசி மாவட்டத்தின் பிரதான சாலைகள் மற்றும் குற்றால அருவிக்கரை பகுதிகள் அனைத்திலும் வாகன நெருக்கடி ஏற்பட்டது.
    • அவ்வப் போது சாரல் மழையும் விட்டுவிட்டு பெய்து வருவதால் சீசன்களை கட்டி உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததன் காரணமாக குற்றால அருவிகளான மெயின் அருவி பழைய குற்றாலம் ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடந்த 2 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நேற்று மதியம் முதல் வெள்ளத்தின் சீற்றம் குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இன்று விடுமுறை தினம் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    குறிப்பாக தென்காசி மாவட்டத்தின் பிரதான சாலைகள் மற்றும் குற்றால அருவிக்கரை பகுதிகள் அனைத்திலும் வாகன நெருக்கடி ஏற்பட்டது. அதனை பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் ஒழுங்குபடுத்தினர்.

    மேலும் குற்றாலத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு, அவ்வப் போது சாரல் மழை யும் விட்டுவிட்டு பெய்து வருவதால் சீசன்களை கட்டி உள்ளது. இதனால் வியாபாரிகளுக்கும் விற்பனை சூடு பிடித்து உள்ளது. தனியார் தங்கும் விடுதிகளும் நிரம்ப தொடங்கி உள்ளது.

    Next Story
    ×