என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புயல் கரையை கடக்கும் நேரத்தில் இரவு நேர பேருந்துகளை இயக்கக்கூடாது- தமிழக அரசு உத்தரவு
    X

    புயல் கரையை கடக்கும் நேரத்தில் இரவு நேர பேருந்துகளை இயக்கக்கூடாது- தமிழக அரசு உத்தரவு

    • சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

    சென்னை:

    வங்கக் கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல், மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இன்னும் சில மணி நேரத்தில் மாண்டஸ் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று நாளை நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65 கிமீ முதல் 85 கிமீ வரை வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மீட்பு படைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், புயல் கரையை கடக்கும் நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இரவு நேர பேருந்துகளை இயக்கக்கூடாது என்றும், போக்குவரத்து மேலாண் இயக்குனர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

    மேலும், புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    Next Story
    ×