என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருப்பதி-காட்பாடி ரெயில் 15-ந்தேதி வரை ரத்து
    X

    திருப்பதி-காட்பாடி ரெயில் 15-ந்தேதி வரை ரத்து

    • ரெயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் வருகிற 15-ந்தேதி வரை நடைபெறவுள்ளன.
    • 15-ந்தேதி வரை விழுப்புரத்தில் இருந்து காலை 5.35 மணிக்கு திருப்பதி செல்லும் விரைவு ரெயில் (எண்: 16854) காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயில் வழித்தடங்களில் பராமரிப்புப் பணிகள் வருகிற 15-ந்தேதி வரை நடைபெறவுள்ளன. இதனால், 15-ந்தேதி வரை திருப்பதியில் இருந்து காலை 6.50 மணிக்கு காட்பாடி புறப்படும் பயணிகள் ரெயில் (எண்: 07659), மறுமாா்க்கமாக காட்பாடியில் இருந்து இரவு 9.15 மணிக்கு திருப்பதி செல்லும் ரெயில் (எண்: 07582) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல் காட்பாடியில் இருந்து காலை 9.50 மணிக்கு ஜோலாா்பேட்டை செல்லும் மெமு சிறப்பு விரைவு ரெயிலும் (எண்: 06417), மறுமாா்க்கமாக ஜோலார்பேட்டையில் இருந்து பகல் 12.45 மணிக்கு காட்பாடி செல்லும் ரெயிலும் (எண்: 06418) ரத்து செய்யப்படுகிறது.

    15-ந்தேதி வரை விழுப்புரத்தில் இருந்து காலை 5.35 மணிக்கு திருப்பதி செல்லும் விரைவு ரெயில் (எண்: 16854) காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

    மறுமாா்க்கமாக இந்த ரெயில் (எண்:16853) திருப்பதிக்கு பதிலாக மாலை 4.35 மணிக்கு காட்பாடியில் இருந்து புறப்பட்டு வழக்கமான அட்டவணையின்படி விழுப்புரம் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×