என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 108 நாள் தொடர் அங்கப்பிரதட்சணத்தை ஓம் சந்துரு சுவாமி தொடங்கியபோது எடுத்த படம்.
திருச்செந்தூர் கோவிலில் 108 நாள் தொடர் அங்க பிரதட்சணம்- ஓம் சந்துரு சுவாமி இன்று தொடங்கினார்
- ஓம் ஸ்ரீ லலிதாம்பிகை சக்தி பீடம் நிறுவனர் ஓம் சந்துரு சுவாமி 18 ஆண்டுகளாக தென்னிந்தியாவில் பல்வேறு கோவில்களில் தொடர்ந்து அங்கப்பிரதட்சணம் செய்து வருகிறார்.
- ஓம் சந்துரு சுவாமிகள் கோவில் வெளிப்பிரகாரம் முழுவதும் அங்க பிரதட்சணம் செய்தார்.
திருச்செந்தூர்:
கடலூர் மாவட்டம் ஓம் ஸ்ரீ லலிதாம்பிகை சக்தி பீடம் நிறுவனர் ஓம் சந்துரு சுவாமி 18 ஆண்டுகளாக தென்னிந்தியாவில் பல்வேறு கோவில்களில் தொடர்ந்து அங்கப்பிரதட்சணம் செய்து வருகிறார்.
சிதம்பரம் நடராஜ பெருமாள் கோவிலில் நாக்கை அறுத்து காணிக்கையாக செலுத்தி உள்ளார்.
இந்நிலையில் காசியில் தமிழ் சங்கம் அமைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு பக்தர்களை அழைத்து செல்ல இருக்கும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பெருந்திட்ட வளாக பணிகளுக்கு ரூ. 200 கோடி நன்கொடை வழங்கிய சிவ நாடாருக்கும், நன்றி தெரிவித்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று முதல் 108 நாட்கள் தொடர்ந்து அங்க பிரதட்சணம் செய்ய முடிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று காலையில் தொடங்கிய அங்க பிரதட்சண நிகழ்ச்சியை திருச்செந்தூர் டி.எஸ்.பி. ஆவுடையப்பன் மலர் தூவி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ஓம் சந்துரு சுவாமிகள் கோவில் வெளிப்பிரகாரம் முழுவதும் அங்க பிரதட்சணம் செய்தார்.






