search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுழன்றடித்த சூறைக்காற்று: சாலைகளில் வேரோடு சாய்ந்த மரங்கள்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சுழன்றடித்த சூறைக்காற்று: சாலைகளில் வேரோடு சாய்ந்த மரங்கள்

    • கனமழையுடன் சூறைக்காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
    • மாநகராட்சி அறைக்கு தெரிவித்த புகாரின் அடிப்படையில் ஊழியர்கள் மரங்களை வெட்டி அகற்றினார்கள்.

    சென்னையில் நேற்று காலை முதல் மாலை வரை விட்டுவிட்டு பெய்த மழை இரவில் தொடர்ந்து பெய்தது. நள்ளிரவில் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் அதிகாலை 3 மணி அளவில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

    மிக கனமழை பெய்தததால் பல இடங்களில் மரங்கள், கிளைகள் சரிந்து விழுந்தன. அதிகாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் நகரின் பல பகுதிகளில் மரங்கள் முற்றிலும் விழுந்தன. மீனம்பாக்கம் போன்ற பகுதிகளில் 80 கி.மீ.-க்கு அதிகமான வேகத்தில் காற்று வீசின. இதனால் மரங்கள் வோரோடு சாய்ந்தன.

    அண்ணாநகர், முகப்பேர், பெரம்பூர், மாதவரம் கொடுங்கையூர், கெல்லிஸ், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மரங்கள் விழுந்தன. நகரம் முழுவதும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து விழுந்ததில் யாருக்கும் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மாநகராட்சி அறைக்கு தெரிவித்த புகாரின் அடிப்படையில் ஊழியர்கள் மரங்களை வெட்டி அகற்றினார்கள். கொட்டும் மழையிலும் விடிய விடிய மரங்கள் வெட்டி அகற்றியதால் போக்குவரத்துக்கு தடை ஏற்படவில்லை. சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றிய இடங்கள் போர்களம் போல் காட்சி அளித்தன.

    Next Story
    ×