search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பங்களாப்புதூர் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து கரும்புகளை சேதப்படுத்திய காட்டுயானை
    X

    பங்களாப்புதூர் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து கரும்புகளை சேதப்படுத்திய காட்டுயானை

    • யானை ஒன்று வேலியை தாண்டி விவசாய தோட்டத்திற்குள் புகுந்து தென்னை மரம் ஒன்றை வேரோடு பிடுங்கி போட்டது.
    • வனத்துறையினர் வந்து சத்தமிட்டு யானையை காட்டுக்குள் விரட்டினர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பங்களாப்புதூர் அருகே எருமைக்குட்டை அண்ணா நகர் பகுதியில் வனத்தையொட்டி ஆறுமுகம் என்பவர் 1½ ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். விவசாய தோட்டத்தை சுற்றி கம்பி வேலி அமைத்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று வேலியை தாண்டி விவசாய தோட்டத்திற்குள் புகுந்து தென்னை மரம் ஒன்றை வேரோடு பிடுங்கி போட்டது.

    அதனைத்தொடர்ந்து கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த யானை கரும்புகளை உடைத்துதின்றது. இதனையடுத்து இது குறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வந்து சத்தமிட்டு யானையை காட்டுக்குள் விரட்டினர்.

    சுமார் கால் ஏக்கர் கரும்புகளை சேதப்படுத்தியதாகவும், தனது விவசாய தோட்டத்திற்கு இந்த காட்டுயானை தினமும் வருவதாகவும் விவசாய நிலத்தின் உரிமையாளர் ஆறுமுகம் தெரிவித்தார்.

    மேலும் விவசாய நிலத்திற்கு காட்டுயானை வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆறுமுகம் உள்ளிட்ட அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×