என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வைகை அணை (கோப்பு படம்)
தேனி மாவட்டத்தில் மழை: 52 அடியை எட்டும் வைகை அணை நீர்மட்டம்
- முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.20 அடியாக உள்ளது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.80 அடியாக உள்ளது.
கூடலூர்:
வைகை அணையின் மொத்த உயரம் 71 அடியாகும். இதன்மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்தது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக ஆண்டிபட்டி, வேலப்பர் கோவில், தெப்பம்பட்டி, கோத்தலூத்து, பிச்சம்பட்டி, ஜம்புளிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. வைகை அணைக்கு நீர்வரத்து 674 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 51.44 அடியாக உள்ளது. விரைவில் 52 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.20 அடியாக உள்ளது. 266 கனஅடிநீர் வருகிறது. 600 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.80 அடியாக உள்ளது. 11 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 89.74 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
கூடலூர் 0.8, உத்தமபாளையம் 1, சண்முகாநதி அணை 1.2, வைகை அணை 11, வீரபாண்டி 3.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.






