என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குருதிக் கொடையளித்து மனித உயிர் காப்போம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
- சாதி - மதம் - நிறம் - பாலினம் என எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை!
- குருதிக் கொடையளித்து மனித உயிர் காப்போம்! மானுடம் தழைக்கச் செய்வோம்!
உலகளவில் இன்று ரத்த தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, ரத்தம் தானம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:-
விபத்து, அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசரத் தேவைகளின்போது பிறர் உயிர் காக்க குருதி கொடையளிப்போரின் நல்லுள்ளம் போற்றுவோம்!
சாதி - மதம் - நிறம் - பாலினம் என எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை!
குருதிக் கொடையளித்து மனித உயிர் காப்போம்! மானுடம் தழைக்கச் செய்வோம்!
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
Next Story






