search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரதமர் மோடியுடன் தம்பிதுரை சந்திப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பிரதமர் மோடியுடன் தம்பிதுரை சந்திப்பு

    • எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கூறி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
    • ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைக்குமா? அல்லது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கிடைக்குமா? அல்லது இரட்டை இலை முடக்கப்படுமா? என்ற நிலை உள்ளது.

    சென்னை:

    டெல்லியில் பிரதமர் மோடியை அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை இன்று காலையில் திடீரென சென்று சந்தித்து பேசி உள்ளார்.

    பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் இந்த சந்திப்பு சுமார் 10 நிமிட நேரம் நடந்தது.

    பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி உள்ள நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்க சந்தித்து விட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டாலும் அரசியல் ரீதியாகவே இந்த சந்திப்பு நடந்ததாக தெரிய வந்துள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இரு அணிகளும் போட்டியிடும் நிலையில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைக்குமா? அல்லது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கிடைக்குமா? அல்லது இரட்டை இலை முடக்கப்படுமா? என்ற நிலை உள்ளது.

    இந்த சூழலில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததற்கு தேர்தல் கமிஷன் தனது நிலைப்பாட்டை நாளை தெரிவிக்க உள்ளது.

    இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கூறி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    எனவே இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடியை எடப்பாடியின் ஆதரவாளரான தம்பித்துரை எம்.பி. சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    Next Story
    ×