search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது
    X

    தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது

    • எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை வந்தனர்.
    • உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றன்.

    தமிழக சட்டசபை கூட்டம் இன்று மூன்றாவது நாளாக காலை 10 மணிக்கு கூடியது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை வந்தனர்.

    எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து வந்ததாக கூறப்படுகிறது.

    ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வழக்கமான வெள்ளைச் சட்டை அணிந்தே வருகை வந்தனர். இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழிய பெற்று எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடங்கியது.

    உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றன்.

    நாளை 12-ந்தேதி, எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடரும். 13-ந்தேதி, எம்.எல்.ஏ.க்களின் விவாதத்திற்கு முதலமைச்சர் பதில் அளித்து பேசுவார்.

    பின்னர் அவசர சட்டம் தொடர்பான சட்ட மசோதா உள்ளிட்ட சில சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். அவை தினமும் காலை 10 மணிக்கு கூடும். கேள்வி நேரம் உண்டு. கவர்னர் உரைக்கு வருத்தமும் நன்றியும் பதிவு செய்யக்கோரி அறிவிப்பு வரப்பெற்றுள்ளதாக எம்.எல்.ஏக்களுக்கு சட்டசபை செயலாளர் சீனிவாசம் கடிதம் எழுதி உள்ளார்.

    சில பகுதிகளை இணைத்தும், விடுத்தும் உரையாற்றியதற்கு பேரவை வருத்தத்தை பதிவு செய்வதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×