search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்- சுப்பராயன் எம்.பி. பங்கேற்பு
    X

    மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்- சுப்பராயன் எம்.பி. பங்கேற்பு

    • மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தூய்மை பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும். இதற்காக இன்று நடைபெறவுள்ள டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.

    480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமான நாள் ஒன்றுக்கு ரூ. 725 ஐ ஏப்ரல் முதல் வழங்க வேண்டும். மாதந்தோறும் முதல் தேதி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த 23-ந் தேதி முதல் தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் விநியோகப் பணியாளர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கி நோய் வரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நாளும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மை பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், திருப்பூர் எம்.பி. சுப்பராயன் மற்றும் தோழமைச் சங்கங்களின் நிர்வாகிகள் முன்னிலை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

    இதுகுறித்து, ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னசாமி கூறுகையில், "தூய்மைப் பணியாளர்கள் 4-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    எங்களது தொடர் போராட்டத்தின் விளைவாக தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தில் இன்று மதியம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதன் முடிவைப் பொறுத்து பணியாளர்களின் அடுத்த கட்டப் போராட்டம் முடிவு செய்யப்படும்" என்றார்.

    Next Story
    ×