என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
- தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து, நிம்மதியின்றி தவிக்கின்றார்கள்.
- தமிழக மீனவர்கள் பாதுகாப்பான முறையில் மீன்பிடிக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து இவர்களின் இதுபோன்ற நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து, நிம்மதியின்றி தவிக்கின்றார்கள்.
மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தர தீர்வுகாணும் வகையில் இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தையின் மூலம் முடிவெடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பாதுகாப்பான முறையில் மீன்பிடிக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்களின் எதிர்கால பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






