என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
    X

    கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    • மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    இதன் காரணமாக தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்ப்டு இருக்கிறது. அந்த வகையில், நீலகிரி, ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×