search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எல்லாம் சமாளிப்புதானா?
    X

    எல்லாம் சமாளிப்புதானா?

    • சமீபத்தில் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.
    • சீனாவில் இருந்து தொழில் நிறுவனங்கள் வெளியேறி வரும் நிலையில் அவர்கள் பார்வை இந்தியா மீது திரும்பி இருக்கிறது.

    ஆடியோ விவகாரத்தால்தான் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இலாகா மாற்றப்பட்டதா? ஆடியோ பிரச்சனையாக இருந்திருந்தால் பதவியே பறிபோயிருக்குமே? என்ற கேள்விகள் உலா வருகின்றன.

    இதுதொடர்பாக உடன் பிறப்புகள் கூறும் தகவல் வேறு விதமாக உள்ளது. சமீபத்தில் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீது அவருக்கு திருப்தி இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இன்னும் 3 ஆண்டுகள் ஆட்சியை தொடர இணக்கமான சூழ்நிலை வேண்டும் என்பதற்காகவே பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதி இலாகா தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். அத்துடன் இரண்டு பெரிய துறைகளை சமாளிப்பது கடினம் என்பதால் அவரிடம் இருந்த தொழில்துறை டி.ஆர்.பி.ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் முறை அமைச்சர் ஆனதுமே மிகப்பெரிய துறை வழங்கப்பட்டிருப்பதற்கும் பின்னணி காரணங்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.

    அதாவது சீனாவில் இருந்து தொழில் நிறுவனங்கள் வெளியேறி வரும் நிலையில் அவர்கள் பார்வை இந்தியா மீது திரும்பி இருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தை விரும்புகிறார்கள். இதனால் முதலீடுகள் அதிக அளவில் குவிகின்றன.

    டி.ஆர்.பி.ராஜா இளையவர். அவரது 'நட்பு' வட்டாரம் பெரியது. இதனால் கூடுதலான கவனம் செலுத்த முடியும் என்று அந்த வட்டாரம் கேட்டுக்கொண்டதாலேயே அவரிடம் இந்த இலாகா கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

    Next Story
    ×