என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

பிரியங்காவுக்கு பிடித்த 'தமிழ்நாடு மாடல்'

- சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு 500 ரூபாய் மானியம் என்று தாரளமாக சலுகைகளை அறிவித்து உள்ளார்.
- மத்திய பிரதேசத்தை பிடிப்பதற்கு தூண்டில் போட்டுள்ளார் பிரியங்கா.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது அந்த கட்சிக்கு புதிய உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. அதேபோல் அடுத்து வர இருக்கும் மத்திய பிரதேசத்தில் ஜபல்பூரில் நடைபெற்ற தேர்தல் பணிகள் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிரியங்கா உற்சாக மூடில் காணப்பட்டார்.
தமிழ்நாடு மாடல் பிரசார யுக்தியை அந்த மாநிலத்திலும் புகுத்தி இருக்கிறார். ஏனெனில் தமிழ்நாட்டை போல் பெண்களுக்கு மாதம் ரூ.1000, பஸ்சில் இலவச பயணம் என்ற வாக்குறுதிகள் கர்நாடகத்தில் வாக்குகளை பெறுவதற்கு காங்கிரசுக்கு கை கொடுத்தது. அதேபோலத்தான் மத்திய பிரதேசத்திலும் தமிழ்நாடு மாடலை கையில் எடுத்து உள்ளார். அதாவது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 யூனிட் வரை இலவச மின்சாரம். அதற்கு மேல் 200 யூனிட் வரை பாதி மின்சார கட்டணம் என்று அறிவித்ததோடு ஏற்கனவே அந்த மாநிலத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 திட்டத்தை அந்த மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்திருப்பதால், அதில் இருந்து ஒரு படி மேல் போய் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்று அறிவித்து கை தட்டலை பெற்றார்.
மேலும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு 500 ரூபாய் மானியம் என்று தாரளமாக சலுகைகளை தமிழ்நாடு மாடலிலேயே அறிவித்து உள்ளார். அறிவித்ததோடு மட்டுமல்ல நாங்கள் சொன்னது போல் கர்நாடகாவில் செயல்படுத்தி இருக்கிறோம். அதேபோல் மத்திய பிரதேசத்திலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்களால் செயல்படுத்த முடியும் என்று சொல்லி மத்திய பிரதேசத்தை பிடிப்பதற்கு தூண்டில் போட்டுள்ளார் பிரியங்கா.