search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் 3,302 பள்ளி மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது
    X

    தமிழகத்தில் 3,302 பள்ளி மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது

    • பொதுத்தேர்வுகளில் முறைகேடு நடக்காமல் தடுக்க பறக்கும் படைகள் மற்றும் நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு கடந்த 1-ந்தேதி தொடங்கி தமிழ் பொதுத்தேர்வு நடந்து உள்ளது. நாளை (5-ந் தேதி) ஆங்கிலத் தேர்வு நடை பெறுகிறது.

    இந்த நிலையில் பிளஸ்-1 பொதுத் தேர்வு இன்று தொடங்கி வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-2 தேர்வை விட பிளஸ்-1 தேர்வை அதிக மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

    இத்தேர்வை 8 லட்சத்து 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். பள்ளிகளில் நேரடியாக 8 லட்சத்து 20 ஆயிரத்து 201 பேரும் தனித்தேர்வர்கள் 5 ஆயிரம் பேரும் எழுதுகின்றனர்.

    பொதுத்தேர்வுகளில் முறைகேடு நடக்காமல் தடுக்க பறக்கும் படைகள் மற்றும் நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

    மேலும் தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் வெளியாகாமல் இருக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளி மையங்களில் நடைபெறும் பொதுத்தேர்வுகளை அங்குள்ள தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் செயல்பட வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இது தவிர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் பிளஸ்-1 தேர்வு இன்று தீவிர கண்காணிப்பில் நடந்தது. காலை 10-15 மணிக்கு தொடங்கி 1.15 மணிக்கு முடிகிறது. தேர்வு எழுதிய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் ஆசி பெற்று சென்றனர்.

    சென்னை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். வினாத்தாள்கள் காப்பி மையங்களில் இருந்து பாதுகாப்பாக மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதே போல தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் தூப்பாக்கி பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. அங்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.

    பிளஸ்-2, பிளஸ்-1 தேர்வு விடைத்தாள்கள் கல்வி அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ள கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ள அறையில் வைக்கப்படுகிறது.

    Next Story
    ×