search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக பட்ஜெட்: ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.3,517 கோடி நிதி ஒதுக்கீடு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழக பட்ஜெட்: ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.3,517 கோடி நிதி ஒதுக்கீடு

    • முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ரூ.500 கோடியில் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
    • கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ.2000 ஆக அதிகரிப்பு .

    தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

    தமிழக அரசின் பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:-

    ராணுவத்தில் உயிர் தியாகம் செய்யும் படை வீரர்கள் குடும்பத்திற்கான நிதியுதவி ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 40 லட்சமாக உயர்த்தப்படுகிறது. தூய்மை பணிகளுக்கு நவீன இயந்திரம் வாங்கப்படும்.

    ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும். இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்.

    மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதிதிராவிடர் நல விடுதிகள் ரூ.100 கோடியில் கட்டப்படும். ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.3,517 கோடி நிதி ஒதுக்கீடு.

    அயோத்தி தாசர் பண்டிதர் பெயரில் ஆதிதிராவிடர் குடியிருப்பு அமைக்க ரூ.3,511 கோடி நிதி ஒதுக்கீடு.

    முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ரூ.500 கோடியில் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். தமிழ்நாட்டின் 18 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்

    வடசென்னை மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு ரூ.147 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்.

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2.20 லட்சம் மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். பொது விநியோகத் திட்டத்திற்கு ரூ.10,500 கோடி நிதி ஒதுக்கீடு.

    மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க ரூ.320 கோடி ஒதுக்கீடு. மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் அதிகரிப்பு.

    மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆக அதிகரிப்பு. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ.2000 ஆக அதிகரிப்பு .

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் வெள்ளத்தடுப்பு பணியை மேற்கொள்ள ரூ.434 கோடி நிதி ஒதுக்கீடு.

    கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு ரூ.16,000 கோடி நிதி ஒதுக்கீடு

    217 செயற்கை பவள பாறைகள் அமைக்கப்படும். கடல் அரிப்பு, கடல் மாசுபாட்டை குறைக்க ரூ.2000 கோடியில் நெய்தல் மீட்பு இயக்கம்.

    மரக்காணத்தில் ரூ.25 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும். ஈரோடு மாவட்டம் அந்தியூர் கோபி வட்டாரத்தில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும்.

    10,000 கிலோமீட்டர் ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும். தெருநாய்கள் இனவிருத்தி கட்டுப்பாட்டிற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×