search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் சிறுவர் பூங்காவில் அடைப்பு- உரிமையாளர்கள் போராட்டம்
    X

    சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் சிறுவர் பூங்காவில் அடைப்பு- உரிமையாளர்கள் போராட்டம்

    • மாடுகளை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பொதுமக்கள் பூங்கா முன்பு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது என பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

    இதனை தடுக்கும் விதமாக மாநகர பகுதியில் சுற்றித்தெரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் உத்தரவிட்டார். அதன் பேரில் 4 மண்டலங்களிலும் மாடுகளை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று தச்சநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட சிந்து பூந்துறை செல்வி அம்மன் கோவில் தெருவில் சுற்றி திரிந்த மாடுகளை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையிலான குழுவினர் பிடித்து மேகலிங்கபுரம் ரேஷன் கடை எதிரே அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் அடைத்தனர்.

    இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பூங்கா முன்பு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்காமல் வீடுகளில் நின்ற மாடுகளை பிடித்து வந்து அடைத்து உள்ளதாகவும், உடனடியாக அனைத்து மாடுகளையும் விடுவிக்கும்படியும் கூறினர்.

    அப்போது சுகாதார ஆய்வாளர் முருகன் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை மட்டுமே பிடித்துள்ளோம். உரிய அபராதமாக ஆயிரம் ரூபாய் செலுத்திவிட்டு மாடுகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறும், இனிமேல் சாலைகளில் மாடுகளை சுற்றி திரிய விடமாட்டோம் என எழுதி தரும்படியும் அறிவுறுத்தினார்.

    எனினும் அந்த பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×