search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 3 சதவீத இடங்கள் மட்டுமே மிச்சாங் புயல் பாதிப்பில் இருந்து தப்பியது: அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தகவல்
    X

    சென்னையில் 3 சதவீத இடங்கள் மட்டுமே 'மிச்சாங்' புயல் பாதிப்பில் இருந்து தப்பியது: அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தகவல்

    • பல்வேறு வகையான ஆய்வுகள் மூலம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் மழை பாதிப்புக்கான காரணங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
    • 97 சதவீத பகுதிகள் மிச்சாங் புயல் மழையால் பாதிப்பை சந்தித்து உள்ளன.

    சென்னை:

    சென்னை கடலோர பகுதியில் கடந்த 3 மற்றும் 4-ந்தேதிகளில் சுமார் 17 மணி நேரம் மிச்சாங் புயல் நிலை கொண்டிருந்தது. இதன் காரணமாக சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை நகரம் வரலாறு காணாத மழையை எதிர்கொள்ள நேரிட்டது.

    இடைவிடாத மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இந்தநிலையில் சென்னையில் எந்தெந்த பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன? எந்தெந்த பகுதிகளில் குறைவான பாதிப்பு ஏற்பட்டது? என்பது பற்றி அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது.

    அந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 30 சதவீத பகுதிகள் மிச்சாங் புயல் மழையால் மிக மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பள்ளிக்கரணை, வேளச்சேரி, பெரும்பாக்கம், தாம்பரம், முடிச்சூர், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு, கோடம்பாக்கம், மாம்பலம் பகுதிகளில் அதிகபட்ச பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. அம்பத்தூர் பகுதிகளில் குறைந்தபட்ச பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் மிக மிக குறைவான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பல்வேறு வகையான ஆய்வுகள் மூலம் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் மழை பாதிப்புக்கான காரணங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

    மழைநீர் கால்வாய்கள் மற்றும் தண்ணீர் வெளியேறும் பகுதிகளில் ஆக்கிரமிப்பு காரணமாகவே மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 சதவீதம் மட்டுமே மழை பாதிப்பில் இருந்து தப்பி உள்ளன.

    97 சதவீத பகுதிகள் மிச்சாங் புயல் மழையால் பாதிப்பை சந்தித்து உள்ளன.

    Next Story
    ×