search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: தமிழகத்தில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: தமிழகத்தில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

    • பருவமழை தொடங்கி 20 நாட்கள் ஆகியும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாததால் தமிழகத்தில் மழைப்பொழிவு குறைவாக உள்ளது.
    • ஒரு பகுதியில் பெய்தால் மற்றொரு பகுதியில் மழை பெய்வது இல்லை. மழையும் தொடர்ச்சியாக பெய்யாமல் விட்டு விட்டு பெய்கிறது.

    சென்னை:

    தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சியால் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகி உள்ளது.

    மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளது.

    இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும் பட்சத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி இன்று முதன் முதலாக காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் நாட்களில் வலுபெற்றால் தமிழகத்தில் கனமழையை எதிர்பார்க்கலாம்.

    பருவமழை தொடங்கி 20 நாட்கள் ஆகியும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாததால் தமிழகத்தில் மழைப்பொழிவு குறைவாக உள்ளது.

    வழக்கமாக தீபாவளி பண்டிகை நேரத்தில் பலத்த மழை பெய்யும். ஆனால் இந்த வருடம் எதிர்பார்த்த மழை இல்லை. ஒருசில இடங்களில் மட்டுமே மழை பெய்கிறது.

    ஒரு பகுதியில் பெய்தால் மற்றொரு பகுதியில் மழை பெய்வது இல்லை. மழையும் தொடர்ச்சியாக பெய்யாமல் விட்டு விட்டு பெய்கிறது.

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் நிலவரம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வருகின்றனர். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×