search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு ஷாக் கொடுத்த மு.க.ஸ்டாலின்- கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு
    X

    மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு ஷாக் கொடுத்த மு.க.ஸ்டாலின்- கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு

    • தி.மு.க. ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது.
    • ஆயிரம் யூனிட்டுக்கு எங்கள் ஆட்சியில் ரூ.6.20 ஆனால் இப்போது ரூ.11. இதனால் மாதம் ரூ.4500 கூடுதல் செலவு.

    சென்னை:

    சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கந்தன் சாவடியில் நடந்தது.

    இதில் அ.தி.மு.க. துணை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது ஆட்சி, மக்களுக்கான ஆட்சியாக இருந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது.

    தேர்தலின்போது சொன்னது என்ன? இப்போது செய்வது என்ன? மாதம் ஒருமுறை மின் கட்டணம் அளவீடு செய்யப்படும். இதன்மூலம் ஒரு குடும்பத்துக்கு ரூ.6 ஆயிரம் லாபம் கிடைக்கும் என்றார் மு.க. ஸ்டாலின்.

    ஆனால் இப்போது 2 மாதத்துக்கு ஒருமுறை அளவீடு.

    ஆயிரம் யூனிட்டுக்கு எங்கள் ஆட்சியில் ரூ.6.20 ஆனால் இப்போது ரூ.11. இதனால் மாதம் ரூ.4500 கூடுதல் செலவு.

    பால் விலை உயர்த்தியதையும் சேர்த்தால் மாதம் ரூ.6 ஆயிரம் மக்கள் தலையில் சுமத்தி இருக்கிறார்கள்.

    குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்றார்கள் தந்தார்களா? இப்படி ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா? உண்மையான திராவிட மாடல் அ.தி.மு.க. ஆட்சிதான்.

    தேர்தல் நேரத்தில் தேசிய கட்சிகளாக இருந்தாலும் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பேசிய கே.பி.கந்தன் ஒரு காலத்தில் தண்ணீர் கிடைக்காது காய்ந்து போன கந்தன்சாவடிக்கு அம்மா ஆட்சியில் நெமிலி குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தவர் கே.பி.முனுசாமி.

    அவர் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது இந்த பகுதியின் அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி தந்தார் என்றார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, தலைமை கழக பேச்சாளர் வண்ணை கணபதி, பெரும்பாக்கம் ராஜசேகர், சி.மணிமாறன் எம்.எம்.பகீம், சென்னை மாநகராட்சி கழக குழு தலைவர் கே.பி.கே.சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எம்.வெங்கடேசன் நன்றி கூறினார்.

    Next Story
    ×