search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    601 வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.16.31 கோடி ஊக்கத்தொகை- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
    X

    601 வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.16.31 கோடி ஊக்கத்தொகை- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

    • கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் தங்கம் 38, வெள்ளி 21, வெண்கலம் 39, ஆக மொத்தம் 98 பதக்கங்களும் வென்றன.
    • தேசிய அளவிலான நீச்சல், ரோலர் ஸ்கேட்டிங் , பில்லியர்ட்ஸ் போட்டிகளில் தங்கம் 83, வெள்ளி 113, வெண்கலம் 111, ஆக மொத்தம் 307 பதக்கங்களும் வென்றன.

    சென்னை:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று உயரிய ஊக்கத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ஊக்கத் தொகையை வழங்கினார்.

    கோவாவில் 37-வது தேசிய விளையாட்டு போட்டி, தமிழ்நாட்டில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி, ஜெர்மனியில் 8-வது உலக அளவிலான குள்ள மனிதர்களுக்கான விளையாட்டு போட்டி, தாய்லாந்தில் உலக திறன் விளையாட்டு போட்டி, டெல்லியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டி, பன்னாட்டு அளவில் பில்லியர்ட்ஸ் போட்டி, ஆசிய சைக்கிளிங் போட்டி, பல்வேறு மாநிலங்களில் தேசிய நீச்சல் மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 601 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.16.31 கோடி மதிப்பில் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

    தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீதம் வேலைவாய்ப்பு ஒதுக்க வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் கால்பந்து வீராங்கனை எஸ். ரங்கநாயகி, வீல்சேர் பென்சிங் வீராங்கனை ஆர்.சங்கீதா, வூசு வீராங்கனைகள் பி.அகல்யா மற்றும் ஆர்.வெர்ஜின் ஆகியோர் வணிக வரி மற்றும் பத்திர பதிவு துறையில் இளநிலை உதவியாளராக அரசுப் பணி ஆணை வழங்கப்பட்டது.

    விளையாட்டுப் போட்டியில் வென்ற பதக்கங்கள் விவரம் வருமாறு:-

    37-வது தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற தங்கம் 19, வெள்ளி 26, வெண்கலம் 34 ஆக மொத்தம் 79 பதக்கங்களும், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் தங்கம் 38, வெள்ளி 21, வெண்கலம் 39, ஆக மொத்தம் 98 பதக்கங்களும் வென்றன.

    மாற்றுத்திறனாளிகளுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தங்கம் 20, வெள்ளி 8, வெண்கலம் 14, ஆக மொத்தம் 42, 8-வது உலக அளவிலான குள்ள மனிதர்களுக்கான விளையாட்டு போட்டியில் தங்கம் 6, வெள்ளி 4, வெண்கலம் 6 ஆக மொத்தம் 16 பதக்கங்களும், தாய்லாந்தில் நடைபெற்ற உலக திறன் விளையாட்டு போட்டியில் தங்கம் 17, வெள்ளி 19, வெண்கலம் 12 ஆக மொத்தம் 48 பதக்கங்களும், தேசிய அளவிலான நீச்சல், ரோலர் ஸ்கேட்டிங் , பில்லியர்ட்ஸ் போட்டிகளில் தங்கம் 83, வெள்ளி 113, வெண்கலம் 111, ஆக மொத்தம் 307 பதக்கங்களும், பன்னாட்டு அளவில் நடைபெற்ற பில்லியர்ட்ஸ் போட்டிகளில் தங்கம் 1, வெள்ளி 2 ஆக மொத்தம் 3 பதக்கங்களும், ஆசிய சைக்கிளிங் போட்டியில் ஒரு வெள்ளி பதக்கமும், ஆக மொத்தம் 594 பதக்கங்களும் வென்றிருந்தது.

    Next Story
    ×