search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தென் மாவட்டங்களுக்கு செல்வோர் கவனத்திற்கு...
    X

    தென் மாவட்டங்களுக்கு செல்வோர் கவனத்திற்கு...

    • கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரத்திற்கு 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என இயக்கப்படும்.
    • தேவைப்பட்டால் ரெயில் நிலையங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படும்.

    கிளாம்பாக்கம்:

    போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நாளை முதல் தென் மாவட்டங்களுககு பேருந்துகள் இயக்கப்படும்.

    * கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை மாநகருக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

    * கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு கிளாம்பாக்கத்தில் இருந்து ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என 280 சர்வீஸ் இயக்கப்படும்.

    * கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரத்திற்கு 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என இயக்கப்படும்.


    * கிளாம்பாக்கத்தில் இருந்து கிண்டிக்கு 3 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என மாநகர போக்குவரத்து இயக்கப்படும்.

    * ஏற்கனவே 2386 சர்வீஸ் பேருந்துகள் இயங்கிக்கொண்டிருக்கிறது. இப்போது கூடுதலாக 1691 சர்வீஸ் இயக்கப்படுகிறது. மொத்தம் 4077 சர்வீஸ் இயக்ககப்படும்

    * விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, கோவை, நெல்லை என 6 அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு வந்து அந்தந்த வழித்தடங்களில் இயக்கப்படும்.

    * பொங்கல் வரை இந்த நிலை நீடிக்கும். பொங்கலுக்கு பிறகு அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும்.

    * மொத்தம் 1140 புறப்பாடுகளும் பொங்கல் வரை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும். பொங்கலுக்கு பிறகு முழுமையாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

    * ஆம்னி பேருந்துகள் இன்றிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை தொடங்கி விட்டார்கள். பொங்கலுக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் சேவை கிளாம்பாக்கத்தில் இயக்கப்படும்.

    * தேவைப்பட்டால் ரெயில் நிலையங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படும்.

    * எனவே பொங்கல் பண்டிகைக்கு பிறகு அனைத்து பேருந்துகளுமே கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×