என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் சந்திப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரவா போகிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
    X

    ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் சந்திப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரவா போகிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

    • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனியாக நின்று வாங்கிய வாக்கு சதவிகிதம் எவ்வளவு?
    • எத்தனை பூத்துகளுக்கு பூத் கமிட்டி அமைக்க ஆட்கள் இருக்கிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார்.

    அவருக்கு தந்தை, பெரியார் மற்றும் கலைஞர் வேட அணிந்து சிறுவர்கள் வரவேற்பு அளித்தனர். மேலும் அப்பகுதி மக்கள் வாழைமரம் மற்றும் தோரணம் கட்டியும் மலர்கள் தூவியும் பிரசாரத்திற்கு வந்த அமைச்சரை வரவேற்றனர்.

    பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் சந்திப்பதால் நாட்டின் பொருளாதாரம் உயரவா போகிறது. மக்கள் சுபிட்சம் அடைவார்களா. இல்லை இலங்கை பிரச்சனை தீருமா? என்ன நடக்கப் போகிறது.

    ஏற்கனவே ஒன்றாக இருந்தவர்கள், தேர்தலை சந்தித்தவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றார்கள். இந்த தேர்தல் களம் பெரியார் மண் இது. ஈரோட்டு மண் மகத்தான வெற்றியை கைச்சின்னத்திற்கு கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

    அனைத்து வீடுகளிலும் கோலமிட்டு ஆரத்தி எடுத்து வரவேற்கின்றனர். அவர்களின் மனநிலை எங்களுக்கு ஆதரவாக இருக்கின்றார்கள். இந்த தொகுதியில் போட்டி என்பது இல்லை. நோட்டாவை விட குறைவாக வாக்குகள் பெற்ற அ.ம.மு.க. இந்த முறை தேர்தலில் பின்வாங்கி இருக்கிறது. இதைப்பற்றி எல்லாம் பேச விரும்பவில்லை.

    85 சதவிகிதம் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றி இருக்கின்றோம். மற்றவற்றையும் முதல்-அமைச்சரின் கவனத்திற்க்கு கொண்டு சென்று நிறைவேற்றுவோம் என்ற உறுதியை மக்களுக்கு அளித்து வருகின்றோம்.

    ஈரோடு மாநகராட்சிக்கு ரூ.300 கோடிக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலை உள்கட்டமைப்பு வசதிகள், மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட திட்டங்களுக்கு மக்கள் சான்றாக இந்த இடைத்தேர்தல் மட்டுமல்லாமல் அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை மக்கள் வெற்றி பெறச்செய்வார்கள்.

    அண்ணாமலை குறித்த கேள்விக்கு, பா.ஜ.க.வில் எத்தனை தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்களிடம் முதலில் கேளுங்கள். நாங்கள் தைரியமாக சொல்கின்றோம். அவர்களின் உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு.?

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனியாக நின்று வாங்கிய வாக்கு சதவிகிதம் எவ்வளவு? எத்தனை பூத்துகளுக்கு பூத் கமிட்டி அமைக்க ஆட்கள் இருக்கிறார்கள். இது போன்ற கேள்விகளுக்கு பதில் கேட்ட பிறகு நான் பதில் சொல்கிறேன். முதல்-அமைச்சரின் திட்டங்களுக்கு அடுத்து வரும் தேர்தல்களிலும் தி.மு.க மட்டுமே வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×