search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டாஸ்மாக் கடைகளில் காகித குடுவைகளில் மது விற்க ஆலோசனை- அமைச்சர் முத்துசாமி தகவல்
    X

    டாஸ்மாக் கடைகளில் காகித குடுவைகளில் மது விற்க ஆலோசனை- அமைச்சர் முத்துசாமி தகவல்

    • கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் காகிதக் குடுவையில் (டெட்ரா பாக்கெட்) மது பானம் வழங்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது.
    • 90 மில்லி காகிதக் குடுவையில் மதுபானம் வழங்கலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அமைச்சர் முத்துசாமி சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    டாஸ்மாக் கடைகளின் விற்பனை தொகை இருப்பை இரவு நேரங்களில் ஊழியர்கள் எடுத்துச் செல்லும்போது பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. அதனை தடுக்கும் வகையில் வங்கி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும், வங்கி அதிகாரிகளே நேரடியாக கடைக்கு வந்து பெற்று செல்லும் வகையிலோ அல்லது வாகனங்கள் மூலம் ஒவ்வொரு கடையாக பெறக் கூடிய வகையிலோ நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல, கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் காகிதக் குடுவையில் (டெட்ரா பாக்கெட்) மது பானம் வழங்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு பாட்டிலை வாங்கி 2 பேர் பிரிக்கும்போது தான் அதில் விஷம் உள்ளிட்ட பொருட்கள் கலப்பதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளை தவிர்க்க, 90 மில்லி காகிதக் குடுவையில் மதுபானம் வழங்கலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×