search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கட்டாய ஹால் மார்க் அறிவிப்பால் பழைய தங்க நகைகளுக்கு பாதிப்பு- மதிப்பை இழந்து விடுமோ என்று பெண்கள் அச்சம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கட்டாய ஹால் மார்க் அறிவிப்பால் பழைய தங்க நகைகளுக்கு பாதிப்பு- மதிப்பை இழந்து விடுமோ என்று பெண்கள் அச்சம்

    • சென்னையில் ஹால்மார்க் சான்றிதழ் பெறுவதற்கான மையங்கள் 12 உள்ளது.
    • நகைகளுக்கு 6 இலக்க ஹால் மார்க் முத்திரை பதித்து டெலிவரி கொடுக்க குறைந்தது ஒரு நாள் ஆகும்.

    சென்னை:

    அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி முதல் 4 இலக்க ஹால் மார்க் தங்க நகை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    6 இலக்க நகைகளையே விற்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இது நகை வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுவாக 'ஹால் மார்க்' என்பது தங்கத்தின் தூய்மையை குறிப்பதற்காக வழங்கப்படும் குறியீட்டு சான்றிதழ்.

    கடந்த 2021 ஜூன் மாதம் முதல் ஹால்மார்க் முத்திரை படிப்படியாக கட்டாயமாக்கப்பட்டது. பொது மக்களும் நகைக்கடைகளில் ஹால்மார்க் நகைகள் தானா என்று கேட்டு வாங்கும் அளவுக்கு விழிப்புணர்வு அடைந்து விட்டனர்.

    தற்போது ஹால்மார்க் முத்திரையுடன் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த தனித்த 4 இலக்க அடையாள எண் (huid) வழங்கப்படுகிறது.

    இனி 4 இலக்க தனித்த அடையாள எண் 6 இலக்கமாக இருக்க வேண்டும். 1-ந் தேதி முதல் 6 இலக்க அடையாள எண் கொண்ட ஹால்மார்க் நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். ஹால்மார்க் இல்லாமல் நகைகள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு நகையின் மதிப்பைவிட 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

    ஏற்கனவே திருமணம் போன்ற சுபகாரியங்களுக்காக வாங்கப்பட்டு கைவசம் இருக்கும் தங்க நகைகளுக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பெண்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் அப்படி அச்சப்பட தேவையில்லை. இந்த விதி விற்பனைக்கு மட்டும்தான். கைவசம் இருக்கும் பழைய ஹால் மார்க் நகைகளை பற்றி கவலைப்பட தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரம் 6 இலக்க எண்களை முத்திரை பதிப்பதில் நடைமுறை சிக்கல் இருப்பதாகவும் குறைந்தபட்சம் 6 மாதங்களாவது அவகாசம் வேண்டும் என்றாலும் தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறினார்.

    சென்னையில் ஹால்மார்க் சான்றிதழ் பெறுவதற்கான மையங்கள் 12 உள்ளது. இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் உள்ளது. ஆனால் தேவையை விட 50 சதவீதம் குறைவாகவே உள்ளது.

    முதலில் இந்த மையங்களுக்கு சென்று விண்ணப்பித்து நேரம் வாங்க வேண்டும். அவர்கள் ஒதுக்கி தரும் நேரத்தில் நகைகளை ஒப்படைக்க வேண்டும்.

    அந்த நகைகளுக்கு 6 இலக்க ஹால் மார்க் முத்திரை பதித்து டெலிவரி கொடுக்க குறைந்தது ஒரு நாள் ஆகும். எனவே, கால நீட்டிப்பு அவசியம்.

    பொதுமக்களும் இந்த மையங்களில் தங்கள் நகைகளை கொடுத்து 6 இலக்க ஹால் மார்க் குறியீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×