என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கள்ளச்சாராயம் விவகாரம்- ஐகோர்ட்டில் நாளை விசாரணை
- சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் அதை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
- ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கள்ளச்சாராயம் குடித்ததில் பாதிக்கப்பட்ட 125-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்க அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒருவர் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் அதை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து இந்த முறையீட்டை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இதனிடையே, விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.






