என் மலர்
தமிழ்நாடு

வாலிபர் உடல் துண்டு துண்டாக வெட்டி கொலை- கேரள கொலை குற்றவாளி காதலனுடன் சென்னையில் கைது
- கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காதல் ஜோடி இந்த கொலையில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.
- தேடப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை ரெயில் பாதுாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாலிபர் ஒருவர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு உடலை சூட்கேசில் வைத்து அங்குள்ள வனப்பகுதியில் வீசி சென்றனர். இந்த கொலை தொடர்பாக திரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காதல் ஜோடி இந்த கொலையில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.
கதிஜாதுல் பர்கனா (18) என்ற இளம் பெண்ணுடன் காதலன் முகமது சிபில் (22) என்பவர் சேர்ந்து கொலை செய்து விட்டு தப்பி சென்றதாக போலீசார் அவர்கள் இருவரையும் தேடிவந்தனர். தேடப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை ரெயில் பாதுாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் எழும்பூர் ரெயில்வே போலீசார் டாடாநகர் செல்ல இருந்த ரெயிலில் கண்காணித்த போது இருவரும் பிடிபட்டனர். எழும்பூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இருவரையும் கைது செய்து கேரள போலீசாரிடம் இன்று ஒப்படைத்தனர்.