என் மலர்
தமிழ்நாடு

X
புதுகல்பாக்கம் மீனவர் பகுதியில் கடலரிப்பை தடுக்க 8 கோடி மதிப்பீட்டில் நேர்கல் தடுப்புகள்
By
மாலை மலர்22 Aug 2023 3:30 PM IST

- மீன்வளத்துறை அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து, அரசின் பார்வைக்கு கொண்டு சென்றது.
- நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணி சீமான் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அருகே உள்ள புதுகல்பாக்கம் மீனவர் பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டு, மணல்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வந்தது., இதனால் மீனவர்கள் படகுகளை நிறுத்தி வைக்கவும், மீன்களை இறக்கவும், சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து, அரசின் பார்வைக்கு கொண்டு சென்றது. அரசு 8 கோடி ரூபாய் மதிப்பில், 4 வரிசைகளில் நேர்கல் தடுப்புகளும், 2 வலை பின்னும் கூடங்களும் அங்கு கட்ட முடிவு செய்து அதற்கான கட்டுமான பணிகளை செய்து வந்தனர்., தற்போது பணிகள் நிறைவடைந்தது. அப்பகுதியை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி, திருப்போரூர் ஆத்ம வேளாண்மைக் குழுத் தலைவர் பையனூர் சேகர், நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணி சீமான் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
Next Story
×
X