என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தீபாவின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா- ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார்
    X

    தீபாவின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா- ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார்

    • சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு கணவர் மாதவனுடன் தீபா சென்றார்.
    • தனது மகள் பெயர் சூட்டு விழாவிற்கு வரும்படி அழைப்பிதழ் கொடுத்தார்.

    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

    தற்போது அந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா வைக்க அவர் திட்டமிட்டார். அவ்விழாவிற்கு முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு கணவர் மாதவனுடன் தீபா சென்றார்.

    மகள் பெயர் சூட்டு விழாவிற்கு வரும்படி அழைப்பிதழ் கொடுத்தார். அப்போது வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×