என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மத்திய-மாநில அரசுகள் வழங்கும் ரேசன் அரிசிக்கு தனித்தனியாக ரசீது வழங்க அரசு உத்தரவு
- மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்கும் அரிசி அளவுக்கு ஒரே ரசீது வழங்கப்பட்டு வந்த நிலையில் தனித்தனியாக ரசீது வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
- ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் புதிய நடைமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னை:
மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்கும் அரிசி அளவுக்கு ஒரே ரசீது வழங்கப்பட்டு வந்த நிலையில் தனித்தனியாக ரசீது வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
உதாரணத்திற்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி என்றால் அதில் மத்திய அரசு வழங்கும் 15 கிலோ அரிசிக்கு ரசீது தனியாகவும், மாநில அரசு வழங்கும் 5 கிலோ அரிசிக்கும் தனித்தனியாக ரசீது வழங்க வேண்டும்.
ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் புதிய நடைமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
புதிய விதிமுறைகளை கடைபிடிக்காமல், பொருட்களை விநியோகம் செய்தால் அதற்குண்டான தொகையை சம்பந்தப்பட்ட அலுவலர்களே செலுத்த நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Next Story






