search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடல் கடந்த காதல் கைகூடியது- வாழப்பாடி பெண் என்ஜினீயரை கரம்பிடித்த பிரான்ஸ் வாலிபர்

    • பெண் பொறியாளர் கிருத்திகா, தனது பெற்றோரிடம் தெரிவித்து திருமணத்திற்கு சம்மதத்தை பெற்றார்.
    • ஆசானே ஒச்சோயிட் குடும்பத்தினரும் திருமணத்தை தமிழகத்திலேயே பாரம்பரிய முறைப்படி நடத்திட சம்மதம் தெரிவித்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி காசி படையாச்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர் பயிற்சியாளர் கந்தசாமி- சுகந்தி தம்பதியரின் மூத்த மகள் கிருத்திகா. என்ஜினீயரான இவர், சிங்கப்பூரில் பன்னாட்டு நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு துறை தலைவராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கும் இவரோடு பணிபுரிந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாரிஸ் நகரத்தைச் சேர்ந்த பென்னடி - அட்மா ஊஜேடி தம்பதியரின் மகனான என்ஜினீயர் அசானே ஒச்சோயிட் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

    இதுகுறித்து பெண் பொறியாளர் கிருத்திகா, தனது பெற்றோரிடம் தெரிவித்து திருமணத்திற்கு சம்மதத்தை பெற்றார். ஆசானே ஒச்சோயிட் குடும்பத்தினரும் திருமணத்தை தமிழகத்திலேயே பாரம்பரிய முறைப்படி நடத்திட சம்மதம் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் இருந்து மணமகனின் உறவினர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகத்திற்கு வந்தனர். வாழப்பாடியில் தமிழர் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற பெண் அழைப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். சேலம் 5 ரோடு பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது.

    தமிழர் பாரம்பரிய முறைப்படி அர்ச்சகர்கள் வேதம் ஓத, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்னி சாட்சியாக திருமணம் நடந்தது. ஆசானே ஒச்சோயிட், தனது காதலி கிருத்திகாவுக்கு தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

    இந்த திருமண விழாவில், வாழப்பாடியைச் சேர்ந்த மணப்பெண்ணின் உறவினர்கள் மட்டுமின்றி, பிரான்ஸ் நாட்டிலிருந்து மணமகனின் உறவினர்களும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு வந்திருந்த பிரான்ஸ் நாட்டினர், தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி- சட்டை, சேலை, தங்க ஆபரணங்கள், தோடு ஜிமிக்கி கம்மல் அணிந்து திருமணத்தில் பங்கேற்று அனைவரையும் வியக்க வைத்தனர்.

    நமது உணவுகளான இட்லி, தோசை, மெதுவடை, வடகறி, சாம்பார், சட்னி, இடியாப்பம், அல்வா ஆகியவற்றை, பிரான்ஸ் நாட்டினர் விரும்பி உண்டு மகிழ்ந்தனர். தமிழர்கள் உணர்ச்சிபூர்வமாக மண விழாவை எங்களை நெகிழ வைத்தது. இவர்களது விருந்து உபசரிப்பும், உணவுகளும் மிகவும் சுவையாக இருந்தது என பிரான்ஸ் நாட்டினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×