என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே தொழிற்சாலை குப்பை கிடங்கில் தீ விபத்து
- இரும்பு தாதுக்களை உருக்குவதற்காக பயன்படும் ராட்சத கேஸ் சிலிண்டர் அருகில் தீ பற்றியதும் பரபரப்பு ஏற்பட்டது.
- முதியவர்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர்.
அம்பத்தூர்:
அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை குப்பை கிடங்கு திடீரென தீப்பற்றியது. தீ மள மளவென குப்பை கிடங்கு முழுவதும் பரவியது. மேலும் இரும்பு தாதுக்களை உருக்குவதற்காக பயன்படும் ராட்சத கேஸ் சிலிண்டர் அருகில் தீ பற்றியதும் பரபரப்பு ஏற்பட்டது.
தீயினால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் தீயை அணைக்கும் பணி மிகவும் சிரமம் இருந்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.
தீ விபத்தினால் அம்பத்தூர், கொரட்டூர், பாடி உள்ளிட்ட பகுதிகளில் பகுதிகள் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால் முதியவர்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர்.
Next Story






