என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஏவிஎம் கால்வாயின் குறுக்கே பாலம்- விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
    X

    ஏவிஎம் கால்வாயின் குறுக்கே பாலம்- விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்

    • ஏவிஎம் கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • இரவிப்புத்தன்துறையில் ஏவிஎம் கால்வாயின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது.

    கன்னியாகுமரி:

    புத்தூர் ஊராட்சி இரவிப்புத்தன்துறையில் ஏவிஎம் கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மகாத்மா காந்தி கிராமப்புறம் மேம்பாடு திட்டம் நிதி மொத்தம் ரூ. 48. 50 லட்சம் ஒதுக்கப்பட்டது.

    இந்த நிதியிலிந்து இரவிப்புத்தன்துறையில் ஏவிஎம் கால்வாயின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இந்த பலத்தை விஜய் வசந்த் எம்.பி. உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

    Next Story
    ×