search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாமக்கல் மண்டலத்தில் முட்டைவிலை 12 நாட்களில் 6 ரூபாயாக உயர்வு- பொதுமக்கள் அதிர்ச்சி
    X

    நாமக்கல் மண்டலத்தில் முட்டைவிலை 12 நாட்களில் 6 ரூபாயாக உயர்வு- பொதுமக்கள் அதிர்ச்சி

    • முட்டைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • பண்ணையில் முட்டை கொள்முதல் விலை அதிகரித்ததால் சில்லரை விற்பனையிலும் முட்டை விலை எகிறியுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு அவற்றிலிருந்து தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த முட்டைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    முட்டை நுகர்வை பொருத்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு என்ற தனியார் அமைப்பு முட்டை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. அந்த வகையில் கடந்த 12 நாட்களில் பண்ணையில் முட்டை கொள்முதல் விலை 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    கிட்டத்தட்ட 2 வார காலத்தில் 2 நாட்களுக்கு ஒரு முறை என்ற விகிதத்தில் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 1-ந்தேதி (பைசாவில்) 480காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து 6-ம் தேதி 485 காசாகவும், 9-ந் தேதி 490 காசு, 11-ந்தேதி 495 காசு, 13-ந்தேதி 505 காசு, 16-ந் தேதி 510 காசு, 23-ந் தேதி 520 காசு, 25-ந் தேதி 535 காசு, 26-ந்தேதி 550 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    பண்ணையில் முட்டை கொள்முதல் விலை அதிகரித்ததால் சில்லரை விற்பனையிலும் முட்டை விலை எகிறியுள்ளது. அந்த வகையில் சில்லரை கடைகளில் முட்டை ஒன்றின் விலை ரூ.6 முதல் 6.50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள், இல்லதரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த 4 மாதங்களில் மட்டும் தீவன மூலப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் முட்டை ஒன்றின் உற்பத்தி செலவு 5 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக 5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்து 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்காரணமாகவே முட்டை விலை உயர்த்தப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×