search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    Edappadi Palaniswami
    X

    10 சதவீத வாக்குகளை அ.தி.மு.க. இழந்துள்ளது- நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

    • முகநூல், எக்ஸ்தளம், இன்ஸ்டாகிராம் வலைத்தளங்களில் இளைஞர்களின் விருப்பம் அறிந்து அதற்கு ஏற்றவாறு கருத்துக்களை பதிவிட வேண்டும்.
    • நமது கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் கண்ணியத்துடன் பதிவிட வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டை தலைமை கழகத்தில் இன்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது கடந்த காலங்களில் அ.தி.மு.க. தொடர்ந்து தக்க வைத்திருந்த 40 சதவீத வாக்கு வங்கியை சுட்டிக்காட்டினார்.

    ஆனால் தற்போது 10 சதவீத வாக்குகளை அ.தி.மு.க. இழந்து இருக்கிறது. இழந்த வாக்குகளை நாம் மீட்டெடுக்க வேண்டும். அதற்கு ஏற்ப பணியாற்றுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.

    குறிப்பாக இளைஞர்கள் வாக்குகள் அதிகம் உள்ளன. அவர்கள் மத்தியிலும், முதல் தலைமுறை வாக்காளர்களிடமும் கட்சியின் செயல்பாடுகளை எடுத்து சொல்லுங்கள்.

    முகநூல், எக்ஸ்தளம், இன்ஸ்டாகிராம் வலைத்தளங்களில் இளைஞர்களின் விருப்பம் அறிந்து அதற்கு ஏற்றவாறு கருத்துக்களை பதிவிட வேண்டும்.

    நமது கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் கண்ணியத்துடன் பதிவிட வேண்டும்.

    சமூக வலைத்தள பதிவுகளை லட்சக்கணக்கானவர்கள் பார்க்கிறார்கள். அதை வைத்து நாம் ஆட்சி அமைக்க உழைக்க வேண்டும். எவ்வளவு வேகமாக செயல்படுகிறீர்களோ அதற்கான பலன் கிடைக்கும் என்றார்.

    Next Story
    ×