search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    3 நாட்கள் நீலகிரிக்கு வராதீர்கள்! - மாவட்ட ஆட்சியர்
    X

    3 நாட்கள் நீலகிரிக்கு வராதீர்கள்! - மாவட்ட ஆட்சியர்

    • கோடை வெயில் குறைந்து ரம்மியமான சூழல் நிலவியது.
    • தமிழகத்தில் 20-ந்தேதி வரை மிக கனமழை மற்றும் அதி கனமழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

    தமிழகத்தில் பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை அறிவித்த நிலையில் கோடை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களாக கோடை மழை தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெய்து வருகிறது. இதனால் கோடை வெயில் குறைந்து ரம்மியமான சூழல் நிலவியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஊட்டி, நீலகிரி, கொடைக்கானலுக்கும் பயணம் மேற்கொண்டனர்.

    இதற்கிடையே தமிழகத்தில் 20-ந்தேதி வரை மிக கனமழை மற்றும் அதி கனமழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 18,19,20 ஆகிய மூன்று நாட்களுக்கு கனமழை காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் இந்த 3 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Next Story
    ×