search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திண்டுக்கல் உழவர் சந்தையில் தக்காளி ரூ.110க்கு விற்பனை
    X

    திண்டுக்கல் உழவர் சந்தையில் தக்காளி ரூ.110க்கு விற்பனை

    • திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.2500க்கு விற்பனையாகிறது.
    • அய்யலூர் சந்தையிலும் உள்ளூர் வரத்து குறைந்ததால் மார்க்கெட் வெறிச்சோடியது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் உழவர் சந்தைக்கு அய்யலூர், வடமதுரை, எரியோடு, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். கடந்த வாரம் வரை 2.50 டன் விற்பனைக்கு வந்த நிலையில் கிலோ ரூ.40க்கு விற்பனையானது. ஆனால் தற்போது அந்த பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து முற்றிலும் நின்றது.

    பெங்களூர் தக்காளி மட்டுமே வருகிறது. இதனால் 1 கிலோ ரூ.110க்கு விற்பனையாகிறது. இன்று உழவர் சந்தைக்கு 1200 கிலோ தக்காளி வந்தது. இந்த தக்காளி வெளி மார்க்கெட்டி ல் ரூ.140 முதல் ரூ.150 வரை விற்பனையாகிறது. தெருக்களில் உள்ள கடைகளில் 100 கிராம் தக்காளி ரூ.20க்கு விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.2500க்கு விற்பனையாகிறது.

    இதேபோல் அய்யலூர் சந்தையிலும் உள்ளூர் வரத்து குறைந்ததால் மார்க்கெட் வெறிச்சோடியது. வெளி மாநில தக்காளி மட்டுமே குறைந்த அளவு வருகிறது. 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.1350க்கு விற்பனையாகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு அய்யலூர் மார்க்கெட் வெறிச்சோடி கிடப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில்,

    விவசாயிகள் பாதிக்கப்படும் போது அவர்களை கண்டுகொள்ள அதிகாரிகள் முன்வருவதில்லை. 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்றுவிடுவதால் விவசாய பணிகளுக்கு ஆள் கிடைப்பதில்லை. இருந்தபோதும் இக்கட்டான நிலையில் விளை பொருட்களை உற்பத்தி செய்தால் அதற்கு போதிய விலை கிடைப்பதில்லை. பற்றாக்குறையான காலங்களில் வெளி மாநில காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இதனால் உள்ளூர் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.

    Next Story
    ×